பிரித்தானியா வரும் பயணிகளுக்கு இனி இது ஏதுவும் தேவையில்லை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
அதாவது, முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகள், பிரித்தானியா வந்த பிறகு Lateral Flow பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை.
இந்த Lateral Flow பரிசோதனைக்காக பயணிகள் 20 பவுண்ட் செலவிட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா வரும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான தனிமைப்படுத்தலையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
அதாவது, தடுப்பூசி போடாத பயணிகள், இனி பிரித்தானியா வந்த பிறகு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.
ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த மாற்றங்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வந்துள்ளது.
அதேவேளை, விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்கள், அவர்கள் செல்லும் இடத்தில் அமுலில் இருக்கும் கொரோனா வைரஸ் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசு குறிப்பிட்டுள்ளது.