இனி இவர்கள் எல்லாம் சுவிட்சர்லாந்துக்குள் நுழையமுடியாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகள் மற்றும் தனி நாடுகளாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட ஜார்ஜியா பிரதேசங்கள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஷெங்கன் விசாவைப் பெற முடியாது என சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய அதிகாரிகளால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களுடன் ஷெங்கன் எல்லைக்குள் நுழையமுடியாது என்று சுவிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மாற்றம் எப்போது அமுலுக்கு வருகிறது?
இந்த அறிவிப்பை வெளியிட்ட சுவிஸ் பெடரல் கவுன்சில், ரஷ்ய பயண ஆவணங்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16, 2023 முதல் அமுலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்ய அதிகாரிகளால் வழங்கப்பட்ட சாதாரண மற்றும் தூதரக பாஸ்போர்ட்கள், கடற்படையின் அடையாள அட்டைகள் மற்றும் நாடற்றவர்களுக்காக வழங்கப்படும் குடியிருப்பு அனுமதிகள் ஆகியவை சுவிட்சர்லாந்தால் அங்கீகரிக்கப்படாது என்றும் பெடரல் கவுன்சில் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |