அடுத்த 4 வாரங்களுக்கு நீடிக்கும் ஊரடங்கு! இதற்கு மட்டும் தளர்வு: பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதி

Curfew UnitedKingdom BorisJohnson
By Kaviarasan Jun 14, 2021 05:59 PM GMT
Report

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடுத்த நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்பதை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில், பிரித்தானியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் படி அங்கு தற்போது பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது.

இருப்பினும், திடீரென்று கடந்த சில தினங்களாக, இங்கிலாந்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், வரும் 21-ஆம் திகதியோடு ஊரடங்கு முடிவுக்கு வராது என்று கூறப்பட்டது.

ஏனெனில், போரிஸ் தலைமையிலான அரசு வரும் 21-ஆம் திகதியோடு அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த முடிவு செய்திருந்தது. ஆனால், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸால் அரசு முடிவை மாற்றியுள்ளது.


அதன் படி இன்று மாலை நாட்டு மக்களிடையே பிரதமர் போரிஸ் ஜோன்சன் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலை பேசிய அவர், தற்போது இருக்கும் சூழ்நிலையில், இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை தளர்த்த முடியாது, அதே சமயம் திருமணத்திற்கான 30 நபர்கள் மட்டுமே என்ற வரம்பு நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் மிகவும் கட்டாயம், அது வரும் ஜுலை 19-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த டெல்டா வைரஸ் சாதரணமாக எடுத்து கொண்டால், மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், போரிஸ் இந்த அறிவிப்பை கூறியுள்ளார்.

வழக்கம் போல் இரவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும், விளையாட்டு நிகழ்வுகளுக்கான வரம்புகள், அதாவது பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் இருக்கும். கொரோனா வைரஸ் வழக்குகள் வாரத்திற்கு சுமார் 64 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு வாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரட்டிப்பாகி வருவதாகவும் எச்சரித்தார்.

அடுத்த 4 வாரங்களுக்கு நீடிக்கும் ஊரடங்கு! இதற்கு மட்டும் தளர்வு: பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்  உறுதி | Restrictions To Last Four More Weeks

இந்த டெல்டா வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 50 சதவீதம் மற்றும் வடமேற்கில் 61 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாம் இப்போது எச்சரிக்கையாக இருப்பதன் மூலம், பல உயிர்களை காப்பாற்றலாம். அடுத்த நான்கு வாரங்கள் என்ற போது இன்னும் பல மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுவிடுவார்கள்,

இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற வாய்ப்புள்ளது. ஜூலை இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் முதல் தடுப்பூசி போட வேண்டும் என்று  இலக்கு வைக்கப்பட்டது, அது இப்போது ஜூலை 19-க்குள் முன்வைக்கப்பட்டுள்ளது,

அதுமட்டுமின்றி நாளை முதல் 23 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்யமுடியும். ஜூலை 19 க்குள், வயதானவர்கள் மூன்றில் இரண்டு பங்கினர் தடுப்பூட் போட்டுவிடுவார்கள் என்று அரசு நம்புகிறது.

ஏற்கனவே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனாவால் அதிக பாதிக்கப்படக்கூடியவர்கள் , அனைத்து முன்னணி சுகாதார மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்கள், 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே மே மாத நடுப்பகுதியில் முதல் தடுப்பூசியைப் பெற்றனர்.

டெல்டா வைரஸ் இப்போது இங்கிலாந்தில்  ஆதிக்கம் செலுத்துகிறது. அதுவே 90 சதவீத வழக்குகளுக்கு காரணமாக உள்ளது. Kent-ல் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா மாறுபாட்டை விட இது 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பரவக்கூடியதாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது,

 மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது. இதனால் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டால், நாம் பாதுகாப்பை வலுப்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிரித்தானியா முழுவதும் கிடையாது, இங்கிலாந்து மற்றும் டெல்டா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது,

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US