உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்
2020 ஆம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சையின் சித்தி பெறுபேறு தர நிர்ணயங்கள் இந்த முறை வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2020 ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் 2019 ம் ஆண்டு உளவியல் நிபுணர் ஆலோசனைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சிறந்த மாணவர் தர நிர்ணய முறையை வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2020 ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சையின முடிவுகள் செயல்திறன் சோதனையாக மட்டுமே கருதப்படும், மாறாக நாடளாவிய ரீதியில் தர வரிசைகள் அறிவிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட மற்றும் நாடளாவிய தரப்படுத்தல் பல்கலைக்கழக சேர்க்கைகளின் போது மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.
தர நிர்ணயங்கள் வெளியிடப்படும் போது பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்க முடியாத மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சணத் பி பூஜீத தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022