கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான் ரஃபேல் நடாலின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு
ஸ்பெயினின் ஜாம்பவான் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலின் சொத்து மதிப்பு குறித்து இங்கு காண்போம்.
நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், தனது கடைசி டென்னிஸ் போட்டியில் தோல்வியுற்றார்.
டேவிஸ் கிண்ணத்தின் காலிறுதிச் சுற்றில் பொட்டிக் வான் டி ஸண்ட்ஸ்சுல்ப் உடன் மோதிய நடால் 6-4, 6-4 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.
பின்னர் கண்ணீருடன் விடைபெற்ற நடால், தன் வாழ்வின் முதல் போட்டியிலும், கடைசி போட்டியிலும் தோல்வி கண்டதை குறிப்பிட்டார்.
அத்துடன் தனது விளையாட்டு வாழ்வின் வட்டம் பூரணமடைந்திருக்கிறது எனவும் அவர் கூறினார்.
நடால் 23 ஆண்டுகால டென்னிஸ் வாழ்வில் 14 முறை பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர் ஆவார். மேலும் 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் வென்றுள்ளார்.
சொத்து மதிப்பு
ஒப்புதல்கள் மூலம் ரஃபேல் நடால் சுமார் 23 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். அதேபோல் ஃபோர்ப்ஸ்படி, 2001ஆம் ஆண்டு முதல் நடால் பரிசுத்தொகை மூலம் 135 மில்லியன் டொலர்கள் பெற்றுள்ளார்.
Celebrity Net Worth கூற்றுப்படி, ஸ்பெயின் பிரபலம் நடாலின் மதிப்பிடப்பட்ட நிகர சொத்து மதிப்பு 225 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,889.5 கோடி) ஆகும்.
விலையுயர்ந்த கார்கள்
நடால் மொத்தம் 5 கார்களை வைத்துள்ளார். அவற்றில் Aston Martin DBS கார், 211 mph வேகம் கொண்டது. 5.2 லிட்டர் இரட்டை டர்போசார்ஜ் V12 எஞ்சின் கொண்ட இந்த காரின் விலை 422,086 டொலர்கள் ஆகும்.
Ferrari 458 Italia: இந்த சூப்பர்க்கார் 4.5 லிட்டர் V8 எஞ்சின் உடன் 202 mph வேகம் கொண்டது. இதில் 0 முதல் 60 mph செல்ல 3.3 வினாடிகளே ஆகும். இதன் விலை 210,776 டொலர்கள் ஆகும்.
Mercedes AMG SL55: இந்த ஸ்போர்ட்ஸ் கார் 4 லிட்டர் இரட்டை டர்போ எஞ்சின் உடன் 469 குதிரைத்திறன் கொண்டது. இதன் விலை 3,24,222 டொலர்கள் ஆகும்.
Kia EV6 GT: நடால் இந்த எலெக்ட்ரிக் காரை ஸ்பெயின் வீட்டில் அவர் இருக்கும்போது பயன்படுத்துகிறார். வெளிநாடுகளில் பெரிய போட்டி தொடர்களிலும் இந்த காரினை அவர் பயன்படுத்துகிறார். இதன் விலை 60,350 யூரோக்கள் ஆகும்.
Kia Stinger: இந்த கார் மணிக்கு 167 mph முதல் 149 மைல் செல்லக்கூடியது. இதன் விலை 37,000 டொலர்கள் ஆகும்.
ரஃபேல் நடால் மாட்ரிட் நகரில் 1.7 ஏக்கர் பரப்பளவில் பெரிய வீட்டினை கொண்டுள்ளார். இதில் 4 படுக்கையறைகள், 5 குளியலறைகள், ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளன. இதன் மதிப்பு 4 மில்லியன் யூரோக்கள் ஆகும்.