அச்சு அசலாக மெக்கானிக் கட்டிய இரண்டாவது ஈபிள் கோபுரம்
பிரான்சில், ஓய்வு பெற்ற மெக்கானிக் ஒருவரும் அவரது பேரனும் சேர்ந்து தங்கள் தோட்டத்தில் ஈபிள் கோபுரம் ஒன்றைக் கட்டியுள்ளார்கள்.
மெக்கானிக் கட்டிய இரண்டாவது ஈபிள் கோபுரம்
ஓய்வு பெற்ற மெக்கானிக்கான Jean-Claude Fassler (77), தன் பேரனான Kilian Antenat (22) உடன் இணைந்து ஈபிள் கோபுரம் ஒன்றைக் கட்டியுள்ளார்கள்.
அப்படியே ஈபிள் கோபுரத்தை அச்சில் வார்த்ததுபோல் உள்ளது அவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஈபிள் கோபுரம்.
ஒரே வித்தியாசம்தான், ஒரிஜினல் ஈபிள் கோபுரத்தின் உயரம் 330 மீற்றர், Fassler உருவாக்கியுள்ள ஈபிள் கோபுரத்தின் உயரல் 30 மீற்றர், அவ்வளவுதான்!
இந்த கோபுரத்தை Fasslerம் அவரது பேரனும் இணைந்து எட்டு ஆண்டுகள் உழைத்து கட்டியுள்ளார்கள்.
அந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், அதன் முதலாவது தளத்தில் ஒரு இரவை செலவிட இருக்கிறார் Fassler.
நான் இந்த ஈபிள் கோபுரத்தைக் கட்டினேன் என்றும், எனக்கு ஈபிள் கோபுரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது என்றும் என்னால் சொல்லமுடியும் என்கிறார் Fassler வேடிக்கையாக!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |