கேரள லொட்டரியில் ரூ.12 கோடியை தட்டிச் சென்ற ஓய்வு பெற்ற காவல்படை வீரர்!
கேரளாவில் விஷூ பம்பர் லொட்டரியில் ரூ.12 கோடியான முதல் பரிசை ஓய்வு பெற்ற காவல்படை வீரர் வென்றுள்ளார்.
ரூ.12 கோடி பரிசு
இந்திய மாநிலமான கேரளா, ஆலப்புழா வீடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வம்பரன். ஓய்வு பெற்ற மத்திய காவல்படை வீரரான இவர், தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர், ஒவ்வொரு மாதமும் 10 முதல் 20 லொட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக லொட்டரி சீட்டுகள் வாங்கி இதுவரை ரூ.5,000 பரிசுத்தொகை மட்டுமே வென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வெற்றி பெற்றதை அறிந்த விஸ்வம்பரன், ஆலப்புழாவில் உள்ள தனது லொட்டரி சீட்டுகளை சரிபார்க்க முடிவு செய்துள்ளார்.
அதில் ஆலப்புழாவைச் சேர்ந்த விசி 490987 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.12 கோடி கிடைத்துள்ளது. இவர் வாங்கிய 2 பம்பர் லொட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு தான் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
இதுதொடர்பாக விஸ்வம்பரன் பேசுகையில், "நான் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். அந்த பணத்தை நான் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. என்னுடைய குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் கொடுப்பேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |