ஓய்வூதிய திட்டத்தை இப்படி பண்ணுங்க: Trade பண்ணாதீங்க - நிபுணர் பட்டாபிராமன்
Trade செய்வதை தவிர்த்துவிட்டு நிஃப்டி 50, நிஃப்டி 100 போன்றவற்றில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என நிதி நிபுணர் பட்டாபிராமன் கூறுகிறார்.
Direct stockயில் முதலீடு (invest) செய்ய வேண்டாம். ஸ்டாக் மார்க்கெட்டில் Analys செய்து, AI-யிடம் உதவி கேட்டு எந்த ஸ்டாக்கை (Stock) வாங்கலாம், விற்கலாம் போன்றவற்றை செய்வதும் நேர விரயம்தான் என்கிறார்.
அவர் சாதாரண Index fund-ஐ பரிந்துரைக்கிறார். நிஃப்டி 500யில் 500 ஸ்டாக்ஸ் இருக்கும்; இதில் 60 முதல் 70 சதவீதம் Large-cap stock ஆகும். மீத 20-25 சதவீதம் Mid-cap, எஞ்சியிருப்பது Small-cap என கூறுகிறார்.
இவ்வாறு செய்யும்போது ஓர் Mutual fund-யில் முழு portfolio கிடைத்துவிடுகிறது. இல்லையென்றால் Multi asset fundஐ தேர்ந்தெடுக்கலாம்.
உங்களது Portfolio எந்த அளவிற்கு எளிதாக இருக்கிறதோ, அந்தளவிற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கும்.
அடுத்த 10 ஆண்டுகள் கழித்து என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை வடிவமைக்க வாரத்தில் ஒருநாள் செலவு செய்தால் போதும் என்கிறார் பட்டாபிராமன்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க