கார் கொடுத்து நெகிழ வைத்த தொழிலதிபருக்கு... தமிழன் நடராஜன் அனுப்பிய அன்பு பரிசு: என்ன தெரியுமா?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மஹிந்திரா அவருக்கு கார் கொடுத்த நிலையில், அவருக்கு நடராஜன் தன்னுடைய அன்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் முதன் முறையாக அறிமுகம் ஆகியிருந்தனர்.
அதுமட்டுமின்றி இவர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தனர்.
இதனால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மஹிந்திரா இந்த அவுஸ்திரேலியா தொடரில் அறிமுகமான அனைத்து இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா தார் என்கிற ஒரு காரை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன் படி, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தபடி வீரர்களுக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.
அந்த பரிசு காருடன், புகைப்படத்தை எடுத்துக்கொண்ட நடராஜன் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி தான் பரிசாக பெற்ற அந்த காரினை தனது பயிற்சியாளரும், நலம் விரும்பியுமான ஜெய்பிரகாஷிற்கு பரிசாக அளித்தார்.
Playing cricket for India is the biggest privilege of my life. My #Rise has been on an unusual path. Along the way, the love and affection, I have received has overwhelmed me. The support and encouragement from wonderful people, helps me find ways to #ExploreTheImpossible ..1/2 pic.twitter.com/FvuPKljjtu
— Natarajan (@Natarajan_91) April 1, 2021
இந்நிலையில், நடராஜன், ஆனந்த் மகேந்திராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் அறிமுக டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய இந்திய அணியின் டீ-சர்ட்டை ஆனந்த் மஹிந்திராவுக்கு தனது கையெழுத்திட்டு பரிசாக வழங்கியுள்ளார்.
இதைப் பெற்றுக் கொண்ட ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், தேங்க்யூ நட்டு உங்களுடைய ரிட்டன் பரிசு கிடைத்தது. அதை நான் பெருமையுடன் அணிந்து கொள்வேன் என பதிவிட்டுள்ளார்.