சுவிட்சர்லாந்தின் இரண்டு முக்கிய மாநிலங்களில் எகிறும் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஆர்காவ் மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சூரிச் மற்றும் ஆர்காவ் மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
மே மாதத்திற்கு பிறகு முதன் முறையாக ஒரே நாளில் நூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆர்காவ் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. வேளிநாடுகளில் இருந்து பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாலையே, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமானதாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீவிர சோதனைகளுக்கு மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆர்காவ் மாநிலத்தை போன்றே, சூரிச் மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிச் மாநிலத்தை பொறுத்தமட்டில், தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் 18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், பலேரிக் தீவுகள், ஸ்பெயின், கிரேக்க தீவுகள் அல்லது சைப்ரஸ் ஆகிய பகுதிகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு திரும்பியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.