தண்ணீர் போத்தலில்…கழிப்பறையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி
மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களில் கழிப்பறை இருக்கைகளை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
40,000 மடங்கு அதிகம்
சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்கள் சராசரி கழிவறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com இன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் போத்தலின் பல்வேறு பகுதிகளான ஸ்பூட் மூடி(spout lid), ஸ்க்ரூ-டாப் மூடி, ஸ்ட்ரே லிட்(screw-top lid, stray lid) மற்றும் ஸ்க்வீஸ்-டாப் மூடி என ஒவ்வொன்றையும் மூன்று முறை வரை துடைத்து எடுத்து நடத்திய ஆய்வில், கிராம் நெகட்டிவ் ராட்ஸ் மற்றும் பேசிலஸ்(gram-negative rods and bacillus) என்ற இரண்டு வகையான பாக்டீரியாக்களை கண்டறிந்தனர்.
Takeya Facebook
இந்த கிராம்-எதிர்மறை பாக்டீரியாக்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகளவில் எதிர்க்கும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சில வகையான பேசிலஸ் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் போத்தல்களின் தூய்மையை வீட்டுப் பொருட்களுடன் ஒப்பிட்டு போது, இவை வீட்டு சமையலறை மடுவை விட இரண்டு மடங்கு கிருமிகளைக் கொண்டிருப்பதாகவும், கணினி மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாவையும், செல்லப்பிராணி குடிக்கும் கிண்ணத்தை விட 14 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.
Getty Premium Image
ஆபத்து இல்லை
இந்நிலையில் ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் டாக்டர் சைமன் கிளார்க் வழங்கிய தகவலில், போத்தல்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும், அது ஆபத்தானது அல்ல என தெரிவித்துள்ளார்.
இந்த மீண்டும் பயன்படுத்தும் தண்ணீர் போத்தலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூடான சோப்பு நீரில் கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
Getty Images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.