வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்து வட்டி வருமானம்: அரசாங்கம் புதிய திட்டம்

Gold
By Arbin Jul 03, 2026 11:14 AM GMT
Report

இந்திய அரசு, மேம்படுத்தப்பட்ட தங்கப் பணமாக்கல் திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, இவ்விவகாரம் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1,000 டன்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் 1,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் திரட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்து வட்டி வருமானம்: அரசாங்கம் புதிய திட்டம் | Revamped Gold Monetisation Scheme

இந்தியர்களைப் பொறுத்தவரை பாரம்பரியமாக தங்கத்தை வாங்கி பராமரித்து வரும் பழக்கம் கொண்டவர்கள். தலைமுறை தலைமுறையாக இந்தியக் குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கம் கைமாறி கொண்டே வருகிறது.

இந்திய குடும்பங்களிடம் சுமார் 25,000 டன்கள் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இதற்காகவே Gold Monetization scheme என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

நேட்டோவின் எதிர்வினையைச் சோதிக்க... இன்னொரு ஊடுருவலைத் திட்டமிடும் புடின்

நேட்டோவின் எதிர்வினையைச் சோதிக்க... இன்னொரு ஊடுருவலைத் திட்டமிடும் புடின்

தங்கத்தை பணமாக்கும் திட்டம் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இந்த திட்டத்தின் கீழ் நாம் செலுத்தி வட்டி வருமானம் பெறலாம். இந்த திட்டத்தில் 2.5 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கும்.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள நகைக்கடைக்காரர்கள் மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் சேகரிப்புப் பங்காளிகளாக (collection partners) இணைக்கப்படலாம்; இதன் மூலம் அவர்கள் வீடுகளில் உள்ள தங்க வைப்புகளைத் திரட்ட முடியும்.

90 பில்லியன் டொலர்

முன்னர் இந்தத் திட்டத்தில், வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நிலையில், உள்நாட்டுத் தேவையையோ அல்லது இத்துறையைச் சார்ந்த வாழ்வாதாரங்களையோ பாதிக்காத வகையில், தங்க இறக்குமதியைக் குறைப்பதற்கான கட்டமைப்பு ரீதியான தீர்வுகளை நாடும் அதே வேளையில், இத்திட்டத்தை மறுசீரமைக்குமாறு இந்தியாவின் பொற்கொல்லர் மற்றும் நகை வணிக அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.

வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்து வட்டி வருமானம்: அரசாங்கம் புதிய திட்டம் | Revamped Gold Monetisation Scheme

இந்தியக் குடும்பங்களிடம் உள்ள தங்கத்தில் ஐந்து சதவீதத்தைக்கூட பணமாக்கினால், அது 90 பில்லியன் டொலர் வரையிலான பணப்புழக்கத்தை உருவாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Gold Monetization scheme என்ற திட்டம் 2015ல் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, 2025 மார்ச் மாதத்திற்குள் வெறும் 38 டன்கள் மட்டுமே பணமாக்கப்பட்டுள்ளன; இந்தியாவின் மதிப்பிடப்பட்ட 25,000 டன் தங்க இருப்போடு ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த அளவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US