புரட்டாசி மாத ராசிபலன் 2021! கன்னி ராசியில் சூரியன் பயணிப்பதனால் கோடிஸ்வர யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் ?

horoscope Rasi palan
By Kishanthini Sep 18, 2021 04:00 AM GMT
Report
Courtesy: samayam

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது.

கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் செய்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு.

நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையால் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகின்றது என்று பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு 6ம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் பெரியளவில் நற்பலன் ஏற்படாது என்பதோடு பணி இடத்தில் அரசியலைத் தவிர்த்து கவனமாக இருப்பதோடு, சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக எந்த செயலையும் செய்வது அவசியம்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களின் எதிரிகளின் கை ஓங்கும். காலையில் எழுந்து சூரிய பகவானை வழிபடுவதோடு, சூரியனுக்குத் தண்ணீர் அர்ப்பணித்து தர்ப்பணம் கொடுங்கள்.

ரிஷபம்

சூரிய பகவான் ரிஷப ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இது ரிஷப ராசிக்கு மிக சிறப்பானதாகவும், தங்கள் எதிரிகளை வெல்ல வாய்ப்பாக இருக்கும். வேலை விஷயத்திலும் முன்னேற்றம் தரக்கூடிய நன்மை அடைவீர்கள்.

மேலும் பணம் தொடர்பான விஷயங்களில் நிறைவு தரும். இந்த மாதத்தில் தொழில் ரீதியான வல்லுநர்களின் ஆலோசனை, ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது.

வியாபாரத்தில் கடன் வாங்குவது தொடர்பான சிந்தனை ஏற்படும். இருப்பினும் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். திருமண வாழ்க்கையும் மிகவும் இனிமையாக இருக்கும் மற்றும் உறவில் முதிர்ச்சி அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியமும் முன்னேற்றம் காண்பிக்கும். நீங்கள் தினமும் சூரிய பகவானை வழிபட்டு தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்கு 4ம் இடத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் நிகழ்வதால், உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திலும், உங்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிதல், சுதாரித்து நிதானமாகச் சற்று மெதுவாக ஓட்டுவது அவசியம். பதற்றமான சூழலில் வண்டி, வாகனத்தை ஓட்டாதீர்கள். பரிகாரமாக வீட்டை விட்டு கிளம்பும் போது உங்கள் பெற்றோரின் ஆசியைப் பெற்று வெளியே செல்லுங்கள்.

கடகம்

கடக ராசியினர் தங்கள் தொழில், வியாபார வாழ்வில் சில சவால்களைச் சமாளிக்க வேண்டியது இருக்கும். இருப்பினும் உங்களின் ஆளுமை, நம்பிக்கை பெரிய ஆதரவாக இருக்கும். கன்னி ராசியில் புதன், சூரியனின் சேர்க்கை காரணமாக உங்கள் பேச்சின் மூலம் உங்களுக்கு செல்வாக்கு ஏற்படுத்தும்.

உங்கள் பங்காளி, கூட்டாளி ஆகியோர் உங்கள் வேலைகளை எளிதாக முடிக்க உதவலாம். உயர் படிப்பைத் தொடர நினைக்கும் கடக ரசியினருக்கு விரும்பிய இடத்தில் சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு புதிய வருமான ஆதாரத்தை பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் கூடுதல் வேலை, கடினமாக உழைக்க வேண்டிய மாதமாக இருக்கும். நீங்கள் குடும்பத்துடன் ஒரு சிறிய சுற்றுலா அல்லது பயணம் செல்ல வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மாதம் ஒரு சிறந்த காலமாக இருக்கும். 

சிம்மம்

சிம்ம ராசி அதிபதி சூரியன் ராசிக்கு 2ம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் புதன், செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக பணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம், வெற்றி ஏற்படும். போட்டி, பந்தயங்களில் லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கும்.

சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றியும், முழு நம்பிக்கையும் ஏற்படும். இருப்பினும் எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். இந்த மாதத்தில் சிறியளவில் முதலீடு செய்ய திட்டமிட்டால் முழு பலன் எதிர்பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசியிலேயே ராசி அதிபதி புதனும், 12ம் ராசி அதிபதி சூரியனும் ஒன்றாக சஞ்சாரம் செய்கின்றனர். இதனால் உங்களின் குடும்ப பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது. மேலும் வீட்டில் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும்.

நீண்ட காலமாக வேலை மாற அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் பல நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

மாணவர்களுக்கு உகந்த காலம். நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் உங்கள் செயல்திறன் மேம்படும். இந்த காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சொத்துக்கள் வாங்க முயன்றால் அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம் முன்னேறச் சாதகமான காலகட்டமாக இருக்கும். பரிகாரம் : நீங்கள் தினமும் விஷ்ணு பகவானை தியானம் செய்த பிறகு வீட்டை விட்டு வெளியே செல்வது நல்லது.

துலாம்

சூரியன் என்றாலே ஆளுமை, உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்க வல்லவர். உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உங்களின் ஆளுமை சற்று குறையும். தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். எந்த ஒரு செலவு செய்வதற்கு முன் இது அவசிய செலவு தானா என ஆராய்ந்து செயல்படவும். இல்லையெனில் தேவையற்ற நிதி சிக்கலில் சிக்க நேரிடும். வெளிநாடு சார்ந்த வணிகம் செய்பவர்களுக்குப் பயனளிக்கும். இந்த மாதத்தில் காவி நிறத்தில் இருக்கும் ஆடைகளை அணியவும்.

விருச்சிகம்

கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சமூக வட்டாரம் வலுவானதாக இருக்கும். நீங்கள் பணியிடத்தில் நல்ல பயனடைவீர்கள்.

தொழில், வேலை தொடர்பான பயணத்தில் உங்கள் வாழ்க்கையில் வெற்றியும், புகழும் கிடைக்கும். தொழிலதிபர்கள் சில புதிய ஒப்பந்தங்களைச் செய்யலாம் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சாதகமாக இருப்பார்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியினருக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் தரக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத் துறையில் கடின உழைப்பின் காரணமாக இனிமையான பலன்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு இடமாற்றமும் அதன் மூலம் நிதி லாபமும் ஏற்படும். செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வெற்றி கிடைக்கும்.

மகரம்

சனி பகவான் ஆளக்கூடிய மகர ராசிக்கு 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தாத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்கள் பயணத்தின் போது சில உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம்.

இந்த காலத்தில் வறுத்த உணவுகளையும், வெளியில் வாங்கக்கூடிய தரமற்ற உணவு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் தேவையற்ற வயிறு சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படலாம்.

சூரியனின் மோசமான விளைவுகளிலிருந்து விடுபட, மகர ராசியினர் தினமும் காலையில் ”ஓம் சூரிய தேவாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

கும்பம்

கன்னி ராசியில் சூரியன், புதனுடன் இணைவதால் உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக, பொறுமையாக செயல்படவும். இந்த கட்டத்தில் நீங்கள் சிறிதளவிலான பண இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

உயர் கல்வியைத் தேடும் ஆர்வலர்கள் தங்கள் வழியில் தடைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் நல்ல பலனை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பண விரயம், செலவு அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் உங்கள் குடும்பத்துடனான உறவில் கசப்பான நிகழ்வுகள் நடக்கும்.

அதனால் உங்களின் பேச்சில் நிதானம், கனிவும் தேவை. செயலில் பொறுமை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சற்று பலவீனமாக உணருவீர்கள். எனவே, உடல் சுறுசுறுப்பாக இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.

மீனம்

கிரகங்களில் முழு சுபராக, தேவர்களின் குருவான பிரகஸ்பதி ஆளக்கூடிய மீன ராசியினர், இந்த காலத்தில் சில சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலுக்கான வாய்ப்பு இருக்கும். பெரியவர்களிடம் பேசும்போது, உங்கள் வார்த்தைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் தவறான புரிதலால் உறவு கெட்டுப் போகலாம்.

இந்த நேரத்தில் தொழில் தொடர்பான எந்த முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.

இந்த மாதத்தில், நீங்கள் பணிபுரியும் துறையில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்காது, எனவே எந்த ஒரு அலுவலக அரசியலிலிருந்தும் விலகி இருங்கள். பரிகாரமாக, சூரிய கடவுளை வணங்கி ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்யவும். 

 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US