ஐஸ் விற்க நினைத்த சிவகாசிக்காரர்.. இன்று வருமானம் மட்டுமே ரூ.5,000 கோடி
சிறுவயதில் படிப்பு ஏறவில்லை என வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று குச்சி ஐஸ், கப் ஐஸ் விற்க நினைத்தவர் இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
யார் இவர்?
தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே கிராமத்தில் பிறந்தவர் ஆர்ஜி சந்திரமோகன். இவரது தந்தை பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு படிப்பு ஏறாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
பின்னர், பூர்வீக நிலத்தை ரூ.13,000க்கு விற்று, அந்த பணத்தை வைத்து குச்சி ஐஸ், கப் ஐஸ் தொழிலை தொடங்க நினைத்தார். இதற்காக, சென்னை ராயபுரத்தில் வாடகைக்கு ஒரு கடையை எடுத்து, அருணோதயம் என பெயரிட்டார்.பின்னர் 1970 -ம் ஆண்டில் அருண் ஐஸ்கிரீம் வந்தது.
இவர் தனது குச்சி ஐஸ், கப் ஐஸ்களை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்க்க நினைத்தார். முதல் முதலாக தனது அருண் ஐஸ்கிரீம்களை விற்பதற்காக 6 டிரைசைக்கிள்களும், 15 தள்ளுவண்டிகளும் வாங்கப்பட்டு, 3 வேலையாட்கள் உடன் தொடங்கினார். முதல் ஆண்டிலேயே லாபம் ரூ.1.5 லட்சத்தை எட்டியது.
இவரது பேக்டரி காலையில் 10,000 ஐஸ்கிரீம் தயாரிக்கும், பின்னர் இரவு வீடாக மாறிவிடும். தொடர்ந்து அருண் ஐஸ்கிரீம் காலேஜ் கேன்டீன்கள், கப்பல் சப்ளையர்களுக்கு பிரபலமாகிவிட்டது. 1981 -ம் ஆண்டில் இவரது வருவாயானது ரூ.4.25 லட்சத்தை எட்டியது.
அருண் ஐஸ் கிரீம் மற்றும் ஹாட்சன் பால்
இதனைத்தொடர்ந்து சந்திரமோகன், ஐஸ் மற்றும் பால் பண்ணையை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார். அப்போது பல பிராண்டுகள் கொடிகட்டி பறந்த நிலையில் அதனை எளிதாக செய்து முடித்தார். ஐஸ்கிரீம் பேக்குகளை அரிசியில் வைத்து தமிழ்நாடு முழுவதும் ரயில்களில் அனுப்பினார். இதனால் அவரது ஐஸ்க்ரீம் கிராமப்புற மக்களை சென்றடைந்து பெரும் லாபத்தை பார்த்தது.
1985 -ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஐஸ்கிரீம் கம்பெனியாக அருண் ஐஸ்கிரீம் மாறியது . பின்னர், 1995 -ல் கேரளா, ஆந்திராவுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்தி, தென்னிந்தியாவில் மட்டும் 700 பார்லர்கள் மூலம் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தார்.
பின்னர்,ஆரோக்கியா பிராண்டில் பால் விற்பனையை தொடங்கிய இவர், 2001 -ம் ஆண்டில் ரூ.100 கோடி பிசினஸ் ஆகியது. இதனிடையே ஐபாகோ என்ற பெயரில் பிரீமியம் ஐஸ் கிரீம் பார்லர்களையும் தொடங்கினார்.
இதனால், 2014 -ம் ஆண்டில் அருண் ஐஸ் கிரீம் விற்பனை ரூ.2000 கோடியை எட்டியது. ஆனால், 2020 -ம் ஆண்டு நிலவரப்படி அருண் ஐஸ் கிரீம் மற்றும் ஹாட்சன் பால் விற்பனையின் வருமானம் ரூ.5,000 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |