57 பந்தில் 100 ரன்கள்! சிக்ஸர் மழை பொழிந்த 44 வயது வீரர்
லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் ரிகார்டோ பாவெல் 57 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், இந்தியா கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சதுரங்க டி சில்வா
டேராடூனில் நடந்த லெஜெண்ட்ஸ் லீக் டி20 போட்டியில் சௌதர்ன் சூப்பர் ஸ்டார் (Southern Super Stars) மற்றும் இந்தியா கேப்பிட்டல்ஸ் (India Capitals) அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதலில் ஆடிய சௌதர்ன் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், கோஸ்வாமி மற்றும் கேப்டன் ராஸ் டெய்லர் தலா 24 ஓட்டங்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய சதுரங்க டி சில்வா (Chaturanga de Silva) இறுதிவரை களத்தில் இருந்து 34 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
??????????? & ?????????? awesome ❤️?#RukengeNahi #LegendsAssemble #LLCT20 | @llct20 @RustyTheron pic.twitter.com/pkGbhtWLHR
— India Capitals (@CapitalsIndia) November 25, 2023
அதனைத் தொடர்ந்து இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் கவுதம் காம்பீர் (3), ஞானேஸ்வர ராவ் (1) சொதப்பிய நிலையில், தொடக்க வீரர் ரிகார்டோ பாவெல்(Ricardo Powell) ருத்ர தாண்டவம் ஆடினார்.
Powell ????? ? #LLCT20 #RukengeNahi #LegendsAssemble pic.twitter.com/cL2ZLFlgon
— India Capitals (@CapitalsIndia) November 25, 2023
பாவெல் சிக்ஸர் மழை
அவருக்கு உறுதுணையாக கிர்க் எட்வர்ட்ஸ் (Kirk Edwards) பொறுப்புடன் ஆடினார். சிக்ஸர் மழை பொழிந்த பாவெல் 57 பந்துகளில் 10 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.
எட்வர்ட்ஸ் 35 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுக்க, இந்தியா கேபிப்பிட்டல்ஸ் அணி 17வது ஓவரிலேயே வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ரிகார்டோ பாவெல் 44 வயதில் அதிரடி சதம் விளாசியது ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தது.
Twitter (@CapitalsIndia)
Twitter (@CapitalsIndia)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |