ஒரு கப் அரிசி போதும்.., வீட்டிலேயே மொறுமொறு அப்பளம் செய்யலாம்
அப்பளம் சாம்பார் சாதம், வத்தல் குழம்பு, புளிக்குழம்பு என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
அந்தவகையில், அரிசியை பயன்படுத்தி வீட்டிலேயே மொறு மொறுவென்று அப்பளம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி- 1 கப்
- சோள மாவு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- சீரகம்- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் விதை- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சை அரிசியை நன்கு கழுவி ஒரு இரவு முழுக்க ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, சோள மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்த மாவில் உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் விதை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதன் மேல் ஒரு துணி கட்டி தண்ணீர் கொதித்ததும் துணி மேல் கரைத்த மாவை ஊற்றி மூடி போட்டு 15 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை ஆறவைத்து எடுத்து வெயிலில் நன்கு காயவைத்து பொறித்து எடுத்தால் சுவையான அரிசி அப்பளம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |