சுருக்கங்களை போக்கி முகத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள வேண்டுமா?
பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியில் உள்ள சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன.
அதிலும் சரும பராமரிப்பிலும் அரிசியைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை மினுமினுப்பாக்குவது மட்டுமில்லாமல், முகத்தில் ஏற்படும் சுருக்கத்தையும், வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமையையும் நீக்குகிறது.
அந்த வகையில் அரிசியை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- அரிசி ஊற வைத்த தண்ணீர் - 2 தேக்கரண்டி
- கிளிசரின் - 1 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி
- தேயிலை எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்)- 1 தேக்கரண்டி
செய்முறை
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, அரிசி ஊற வைத்த தண்ணீரில் பருத்தித் துணியை நனைத்து பேஸ் பேக்கை முழுவதுமாக துடைத்து எடுக்கவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு 4 தேக்கரண்டி அரிசியை நன்றாக ஊற வைத்து, அரைத்து வடிகட்டவும். பின்னர் வடிகட்டிய அரிசிப் பாலை மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
இது கிரீம் பதத்திற்கு மாறியதும் சிறிது ஆற வைத்து, அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி என அனைத்தையும் சேர்த்து ‘கிரீம்’ பதம் வரும் வரை நன்றாகக் கலக்கவும்.
பின்பு இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த கிரீமை 4 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைக்கலாம்.
தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது பால் கொண்டு முகத்தைத் துடைத்த பின்னர் மேற்கூறிய கிரீமை, முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
இந்த முறையைத் தொடர்ந்து வாரம் 3 நாட்கள் வீதம், 2 மாதங்கள் பின்பற்றினால் முகம் மினுமினுப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், பொலிவாகவும் இருக்கும்.