30 நிமிடத்தில் சருமத்தை பளிச்சிட செய்யும் அரிசிமா + தயிர்
தற்போதைய சமுதாயத்தில் வாழும் பெண்கள் தங்களின் முக அழகை வெளிப்படுத்த அதிக ஆர்வமும் போட்டியும் உள்ளவர்கள் எனலாம்.
அதற்காக பலரும் பல விதமான முறையில் முயற்சி செய்து பார்ப்பார்கள். இயற்கையை மீறி செயற்கையான முறையில் செய்வதுண்டு. இதனால் பிற்காலத்தில் பல தீமைகள் ஏற்படும்.
நாள் முழுக்க வெளியில் அலைந்து விட்டு, வீட்டுக்குள் வந்ததுத் கண்ணாாடியைப் பார்த்தால்...என்ன முகம் இப்படி ஆயிடுச்சே என்று கவலைப்படுவீர்கள்.
எனவே வீட்டில் தினமும் இருக்கக்கூடிய இரண்டு பொருட்களான அரிசிமா மற்றும் தயிர் வைத்து எப்படி 30 நிமிடத்திலேயே முகத்தை பளிச்சிட செய்யலாம் என பார்க்கலாம்.
1. அரிசிமா + தயிர்
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசி மா மற்றும் தயிரை சேர்த்து பேஸ்ட் உருவாக்கி கொள்ளவும்.
பின்னர் அதை புருவம், கண்களைச் சுற்றி, உதட்டுப் பகுதியைத் தவிர்த்து பூசிக்கொள்ளவும்.
20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி எடுக்கவும்.
இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம். ஒரு முறை செய்தாலே நீங்கள் முகத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
2. அரிசி மா + முட்டை வெள்ளைக்கரு
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
செய்முறை
அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் போன்று தயார் செய்துக்கொள்ளவும்.
பின் அதை முகம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவலாம்.
இந்த இரண்டு முறையும் செய்வதன் மூலம் நீங்கள் செக்க சிவந்த முகத்தை கூடிய விரைவில் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |