முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அரிசி மாவு.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கலக்கவும்.
இதன் பிறகு இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பின் கூந்தலை வெதுவெதுப்பான நீரால் கழுவிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு அடர்தியாகவும், நீளமாகவும் வளரும்.
அதேபோல் முடிஉதிர்வு நிறுத்தி கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        