ஒரு கப் அரிசி மாவு போதும்.., 15 நிமிடத்தில் புட்டு செய்யலாம்
Rice-flour-puttu-recipe- பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
இட்லி, கொழுக்கட்டை, புட்டு என ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.
அந்தவகையில், அரிசி மாவை வைத்து 15 நிமிடத்தில் சுவையான புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 கப்
- தேங்காய் துருவியது- 1 கப்
- உப்பு- சிறிதளவு
- ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
- சர்க்கரை- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள நீரை விட்டு உதிரி உதிரியாக பிணைந்துகொள்ளவும்.

பின்னர் அந்த பிணைந்து வைத்த புட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவைக்கவும்.
இறுதியாக ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்தால் சுவையான அரிசி மாவு புட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |