இயற்கையாகவே முகம் பொலிவுபெற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் பொலிவிழந்து கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன.
இந்த பிரச்சனைகளை வீட்டிலேயே சரிசெய்து இயற்கையாகவே பொலிவான முகத்தை பெற என்ன செய்வது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அரிசி- 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் அரிசியை நன்கு கழுவி ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் காலையில் அரிசி நீரை வடிகட்டி அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்கவும்.
இதனை ஒரு பருத்தி துணி கொண்டு நனைத்து முகத்தை சுத்தம் செய்வதால் கறைகள் மற்றும் இறந்த சருமத்தை அகற்ற உதவும்.
2. தேவையான பொருட்கள்
- அரிசி மா- 1 ஸ்பூன்
- தேன்- ½ ஸ்பூன்
- பால- ½ ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் அரிசி மா, தேன், பால் சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
அரை மணி நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவு பெறும்.
3. தேவையான பொருட்கள்
- அரிசி தண்ணீர்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
தயாரிக்கும் முறை
முதலில் அரிசி நீர், கற்றாழை ஜெல், கிளிசரின், வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்துவோம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர கரும்புள்ளிகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |