தித்திக்கும் சுவையில் பச்சரிசி பாயாசம்.., எப்படி செய்வது?
Rice Payasam In Tamil- வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாயசத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் நாவூறும் சுவையில் பச்சரிசி பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - ½ கப்
- தண்ணீர் - 1½ கப்
- பால் - 1 லிட்டர்
- கன்டென்ஸ்டு மில்க் - 200g
- நெய் - 2 ஸ்பூன்
- முந்திரி பருப்பு- 15
- திராட்சை- 10
- ஏலக்காய் தூள் - ½ ஸ்பூன்
- குங்கும பூ- சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊறவைத்து, குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
பின் கடாயில் பால் ஊற்றி கொதிக்கவைத்து பாதியாக குறைந்த பின் வேகவைத்த பச்சரிசியை சேர்த்து கிளறவும்.
அடுத்து இதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
இதற்கடுத்து தாளிப்பு கரண்டில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுக்கவும்.
பின்னர் பால் நன்கு கொதித்ததும் குங்கும பூ, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பச்சரிசி பாயசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |