வெறும் அரிசியை மென்று தின்றால் என்ன நடக்கும் தெரியுமா? தீமைகள் அதிகம்
வெறும் அரிசியை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும்.
வெறும் அரிசியை அடிக்கடி சாப்பிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்?
அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அது விரைவில் செரிமானமாகாமல் அஜீரண கோளாறை உண்டாக்கும். ஏனெனில் மற்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை விட அரிசியில் செல்லுலோஸ் என்னும் பொருள் உள்ளது.
அரிசி பேசில்லஸ் சீரஸ் என்னும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உடலினுள் செல்லும் போது, உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இதன் விளைவாக வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அரிசியில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக் கொல்லி உடலினுள் செல்லும் போது, செரிமான செல்களை அழித்துவிடுவதோடு, இது அதிகமாக உடலினுள் சேரும் போது, குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
அரிசியை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் நம்முடைய பற்களில் கூட பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. அரிசியில் அதிகப்படியான மாவுப்பொருள் உள்ளது. இந்த மாவுப்பொருள் நம்முடைய பற்களில் இருக்கும் கிருமிகளுக்கு உணவாக அமைந்து விடுகிறது. பற்களில் இருக்கும் கிருமிகள் இந்த மாவு பொருளை நன்றாக சாப்பிட்டு பற்களிடையே தங்கி பல்லில் சொத்தை வரும் அளவிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்
கர்ப்பிணிப் பெண்களில் பலருக்கு ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றும். அப்படிப்பட்ட பெண்கள் இந்த அரிசியை சாப்பிடும் பழக்கத்தைக் கூட வைத்திருக்கிறார்கள். அது மிக மிக தவறு. கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்தசோகை அந்த குழந்தையையும் கட்டாயம் பாதிக்கும்.
Adobe Stock