ஒரு கப் சாதம் இருந்தால் போதும் சுவையான மொறுமொறு மெதுவடை தயார்: ரெசிபி இதோ
பண்டிகை காலங்களில் அனைவர் வீடுகளிலும் இடம் பெறும் முக்கியமான உணவு வடை.
காலை உணவாக இட்லி- வடை இதற்கு ஈடாக எந்த உணவையும் சொல்லமுடியாது. அதுவும் டீ குடிக்கும் நேரத்தில் டீயோடு வடை சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும்.
ஒரு கப் சாதத்தை வைத்த சுவையான மொறுமொறு மெதுவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 1 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 1
- கருவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- 1 கொத்து
- உப்பு- தேவையான அளவு
- அரிசி மாவு- 1/2 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் சாதத்தை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த சாதத்தை ஒரு பவுலில் மாற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து பிணையவும்.
அடுத்து இதில் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதை நன்கு சூடுபடுத்தவும்.
எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து அதில் பிணைந்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் 1 கப் சாதத்தை வைத்து மொறுமொறு மெதுவடை பத்தே நிமிடத்தில் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |