முடி உதிர்வை நிறுத்த உதவும் அரிசி வடித்த நீர்: எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
ஒழுங்கற்ற உணவு, ஊட்டசத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்த அரிசி வடித்த நீரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அரிசி வடித்த நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் சாதம் வடித்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து அதனை குளிர விடவும்.
பின் உங்களின் கூந்தலை சிக்கு எடுத்து இரண்டாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து பருத்தியை உருண்டையாக்கி அதனை அரிசி வடித்த நீரில் நனைத்து உச்சந்தலையில் தடவவும்.
இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு உச்சந்தலையில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து இதனை சுமார் 15-30 நிமிடங்கள் வரை ஊற விட்டு மிதமான வெந்நீரில் நன்கு அலசவும்.
மேலும், முடி உதிர்வை தடுக்க அரிசி வடித்த நீரை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |