சாதம் வடித்த தண்ணீரை தினமும் ஒரு டம்ளர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
வீடுகளில் சாதம் வடித்த தண்ணீரை பொதுவாக பலரும் கீழே ஊற்றி விடுவார்கள். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கஞ்சி தண்ணீரில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன?
தினமும் ஒரு டம்ளர் கஞ்சியுடன் மோர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் தணிக்கிறது. இந்த அரிசி கஞ்சியில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கும் குடிக்க கொடுக்கலாம்.
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
காயம் உள்ள இடங்களில்...
சொறி சிரங்கு ஏற்பட்டுள்ள இடங்களில் இந்த கஞ்சியில் பருத்தியை நனைத்து காயம் உள்ள இடங்களில் கட்டி வர அரிப்பு மற்றும் வலி அடங்கும்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
பழசாறுகளுக்கு ஈடாக அரிசி கஞ்சி குடிப்பதும் பசியை தூண்ட உதவுகிறது. இதில் சிறிதளவு புதினா மற்றும் சீரகத்தூள் சேர்த்து குடிப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
wikipedia