இந்திய ராணுவத்தை அவமதித்த பிரபல நடிகை! வெடித்த சர்ச்சை
இந்திய ராணுவத்தை கிண்டல் செய்யும் விதமாக இந்தி நடிகை ரிச்சா சதா வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டல் பதிவு
இந்தியாவின் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர், காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறினால் தங்கள் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என கூறிய பதிவை நபர் ஒருவர் சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டார். இதனை ரீ-டுவீட் செய்த நடிகை ரிச்சா சதா, 'கல்வான் ஹாய் சொல்கிறது' என பதிவிட்டார்.
கல்வானில் சீன ராணுவம் நுழையும் என பொருள்படும் படி அவரது இந்த பதிவு இருந்ததால், இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்து விட்டார் என பலரும் ரிச்சாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், கல்வான் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை இவர் கிண்டல் செய்துள்ளார் என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் சர்ச்சை வெடித்தது.
புகார் மனு
இதனைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர் அசோக் பண்டிட் காவல் நிலையத்தில் நடிகை ரிச்சா மீது புகார் அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் புகாரின் நகலையும் பகிர்ந்துள்ளார். அதேபோல் நடிகர் அக்ஷய் குமார் தனது பதிவில் ரிச்சாவை குறிப்பிட்டு, 'இதைப் பார்க்கும்போது வலிக்கிறது. நமது ஆயுதப் படைகளுக்கு எதுவும் நன்றியற்று இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால் தான் நாம் இன்று இருக்கிறோம்' என கூறியுள்ளார்.
Hurts to see this. Nothing ever should make us ungrateful towards our armed forces. Woh hain toh aaj hum hain. ? pic.twitter.com/inCm392hIH
— Akshay Kumar (@akshaykumar) November 24, 2022
மன்னிப்பு கேட்ட நடிகை
இந்த நிலையில் ரிச்சா சதா தனது பதிவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். அவர் கூறுகையில், 'எனது பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களும் ராணுவத்தில் இருந்தவர்கள் தான்' என தெரிவித்துள்ளார்.
@BediSaveena pic.twitter.com/EYHeS75AjS
— RichaChadha (@RichaChadha) November 24, 2022