100வது போட்டியில் சொதப்பிய மந்தனா: மிரட்டிய சமரி அதப்பத்து..இலங்கைக்கு 276 ரன் இலக்கு
மகளிர் இலங்கைக்கு அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 275 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணி முதலில் பந்துவீச்சு
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்று இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
தனது 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 18 (28) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, கவிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோரால் ரன்அவுட் செய்யப்பட்டார்.
எனினும், பிரதிகா ராவல் 35 ஓட்டங்களும், ஹர்லீன் தியோல் 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஹர்மன்ப்ரீத் 30 (45) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரிச்சா கோஷ் அரைசதம்
பின்னர் ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் கூட்டணி மூலம் இந்திய அணி ஓட்டங்களை சேர்த்தது.
ஜெமிமா 46 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சமரி அதப்பத்து ஓவரில் lbw ஆனார்.
அதிரடியில் மிரட்டி அரைசதம் விளாசிய ரிச்சா கோஷ் (Richa Ghosh) 48 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் குவித்தார்.
சமரி அதப்பத்து அபாரம்
தீப்தி ஷர்மா 24 ஓட்டங்களும், கஷ்வீ 17 ஓட்டங்களும் எடுக்க, இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 275 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) மற்றும் சுகந்திகா குமாரி தலா 3 விக்கெட்டுகளும், இனோகா ரணவீரா, தேவ்மி விஹங்கா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |