இன்றைய இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு இவரா நடுவர்! அன்னிக்கு டோனி அவுட்டானது நினைவிருக்கா? ரசிகர்கள் புலம்பல்
டி20 உலகக்கோப்பையில் இன்று நடக்கும் இந்தியா - நியூசிலாந்து போட்டியில் கள நடுவர்களின் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பார்க் பணியாற்ற இருப்பது இந்திய ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இரண்டு அணிகளும் இதற்கு முன் பாகிஸ்தானோடு நடந்த போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு நாக் டவுட் போட்டி போல இருக்கும்.
இந்த போட்டியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் கெட்டிபார்க் நடுவராக பணியாற்றுகிறார். ரிச்சர்ட் கெட்டில்பார்க் தான் இந்திய அணி 2019ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் செமி பைனலில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த போது நடுவராக இருந்தவர்.
இவர்தான் டோனி ரன் அவுட் ஆன போது ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்தது. அந்த ரியாக்சனை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இவர் இந்திய அணிக்கு கொஞ்சம் ராசி இல்லாத நடுவராக பார்க்கப்படுகிறது.
Richard Kettleborough is the on-field umpire in today’s match ?#INDvNZ #T20WorldCup pic.twitter.com/EUyZ4lR948
— Mohsin (@imsmohsin) October 31, 2021
முக்கியமான போட்டிகளில் இவர் நடுவராக இருக்கும் போதெல்லாம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. ஆம் 2014ல் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா இலங்கையிடம் தோல்வி அடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பார்க்தான் நடுவர்.
இதோடு 2014ல் இருந்து இந்தியா தோற்ற முக்கிய போட்டிகள் சிலவற்றிலும் ரிச்சர்ட் தான் நடுவராக பணியாற்றினார்.
இந்த நிலையில் இன்றைய முக்கியமான போட்டியில் அவர் மீண்டும் நடுவராக வருவது ரசிகர்களை கொஞ்சம் பீதியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.