மஹேல ஜெயவர்த்தனேவின் அந்த முடிவால் மும்பை இந்தியன்ஸின் போக்கு மாறியது! நடுவரின் சர்ச்சை கருத்து
மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே கூறிய அறிவுறுத்தல், ஆட்டத்தின் போக்கே மாற்றிவிட்டதாக இங்கிலாந்து நடுவர் ரிச்சர்ட் கேட்டல்போரோக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் ஹாட்ரிக் சிக்ஸர்
நேற்று நடந்த ஐபிஎல் குவாலிபையர் 2 ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தால் பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது.
மும்பை அணி நிர்ணயித்த 204 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 87 ஓட்டங்கள் விளாசி வெற்றி பெற வைத்தார்.
Shreyas Iyer is the most underrated player and captain.
— Yanika_Lit (@LogicLitLatte) June 1, 2025
He hits sixes like Rohit Sharma,
Builds innings and finishes games like Virat Kohli,
Fields like Ravindra Jadeja,
And captains like Dhoni.
He is an all-in-one#MIvsPBKS
pic.twitter.com/dge0i5p0n0
குறிப்பாக, டாப்லி வீசிய 13வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இதனை குறிப்பிட்டு, இங்கிலாந்து நடுவர் ரிச்சர்ட் கேட்டல்போரோக் (Richard Kettleborough) கருத்து பதிவிட்டுள்ளார்.
ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஜெயவர்த்தனே
அவர் தனது பதிவில், "பஞ்சாப் அணிக்கு 8 ஓவர்களில் 95 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது திடீரென வெளியில் இருந்து வந்த மஹேல ஜெயவர்த்தனே, அடுத்த ஓவரை ரீஸ் டாப்லியிடம் ஒப்படைக்குமாறு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அறிவுறுத்தினார்.
இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. டாப்லியின் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசினார்" என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு ஜெயவர்த்தனே ஒரு காரணமாக அமைந்துவிட்டதாக ரிச்சர்ட் கூறியுள்ளது சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
PBKS needed 95 in 8 overs and then suddenly, from outside, Mahela Jayawardene instructed Hardik Pandya to hand the next over to Reece Topley. This decision changed the course of the game, as Shreyas Iyer smashed 3 sixes in 3 balls off Topley.#PBKSvsMI pic.twitter.com/Oaqj1goBqB
— Richard Kettleborough (@RichKettle07) June 2, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |