வாடகை வீட்டில் தொடங்கிய நிறுவனம்... உலகெங்கும் பல நாடுகளில்: தற்போதைய சந்தை மதிப்பு
பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் தொடங்கிய நிறுவனம் இன்று உலகெங்கும் பல நாடுகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளை செயல்படுத்தி வருகிறது.
28 மருத்துவமனைகள்
இந்தியாவில் கோடீஸ்வர மருத்துவர்களில் ஒருவர் பெங்களூருவை சேர்ந்த ரஞ்சன் பய். இவரது Manipal Education and Medical Group என்ற MEMG குழுமமே, உலகெங்கும் 6 பல்கலைக்கழகங்கள் மற்றும் 28 மருத்துவமனைகளை திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ரஞ்சன் பய் மணிப்பாலின் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தில் பெல்லோஷிப்பை முடிக்க அமெரிக்கா சென்றார்.
அதன் பின்னர் மலேசியாவில் அமைந்துள்ள மேலாகா மணிப்பால் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக தனது தொழில்முறை பணியை தொடங்கினார்.
சொத்து மதிப்பு சுமார் 23,000 கோடி
2000ல் பெங்களூருவில் வாடகை வீட்டில் தமது MEMG நிறுவனத்தை தொடங்கினார். சுமார் 200,000 அமெரிக்க டொலர் முதலீட்டில் துவங்கப்பட்ட MEMG குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது 3 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
டாக்டர் ரஞ்சன் பயின் மொத்த சொத்து மதிப்பு என்பது சுமார் 23,000 கோடி என்றே கூறப்படுகிறது. MEMG குழுமத்தின் சேவை தற்போது மலேசியா, ஆன்டிகுவா, துபாய் மற்றும் நேபாளம் நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |