லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறிவிட்டு விவசாயம் செய்த நபர்! இப்போது வருமானம் கோடிகளில்
பொதுவாக நாட்டில் அதிக ஊதியம் வாங்குபவர்கள் பொறியியல் பட்டதாரிகள் அல்லது MBA பட்டதாரிகள். ஆனால் பிரமோத் கௌதம் என்ற நபர் தமது பொறியியல் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் களமிறங்கி, தற்போது இந்தியாவிலேயே பணக்கார விவசாயி என அறியப்படுகிறார்.
பணக்கார விவசாயி
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரமோத் கௌதம், பொறியியல் பட்டதாரியாக இருந்து இந்தியாவின் பணக்கார விவசாயியாக மாறிய சம்பவம் மிகவும் தனித்துவமான வெற்றிக் கதைகளில் ஒன்று.
அவரது தற்போதைய ஆண்டு வருவாய் என்பது பெரும்பாலான ஐஐடி மற்றும் ஐஐஎம் பட்டதாரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை விடவும் அதிகம்.
பெருநிறுவனம் ஒன்றில் ஆட்டோமொபைல் பொறியாளராக பணியாற்றிய அவர் அதிக சம்பளமும் பெற்று வந்தார், ஆனால் அவர் தனது வேலையில் திருப்தியைக் காணவில்லை. அவருக்கு சொந்தமாக 26 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.
ஆண்டுக்கு 1 கோடி
திடீரென்று ஒருநாள் தமது வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தில் களமிறங்கினார். அதுவும் பாரம்பரிய விவசாயத்தால் பலனில்லை என்பதை கண்டறிந்து புதிய முயற்சியாக தோட்டக்கலையில் களமிறங்கினார்.
சிறந்த அறிவியல் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி பசுமை இல்லத்திற்குள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது என முடிவு செய்தார். தொடக்கத்தில் வேர்க்கடலை மற்றும் மஞ்சளை பயிரிட்டுள்ளார்.
இதனால் போதிய வருவாய் ஈட்ட முடியாமல் போனது. அடுத்து பருப்பு வகைகளை முயற்சி செய்ய, அது அவருக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளது. இதனையடுத்து பிரமோத் கௌதம் பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை விற்பனை செய்யும் வந்தனா ஃபுட்ஸ் என்ற தனது சொந்த பருப்பு பிராண்டைத் தொடங்கினார்.
தற்போது ஆண்டுக்கு 1 கோடி வரையில் வருவாய் ஈட்டுகிறார். இது இந்தியாவில் பல ஐஐடி மற்றும் ஐஐஎம் பட்டதாரிகள் பெறும் சம்பளத்தை விட அதிகம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |