மாதம் ரூ.2,500 வருவாய் ஈட்டிய நபர்... தற்போது ரூ.87,000 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்: யார் அவர்?
இளம் வயதிலேயே வணிகத்தில் களமிறங்கி, மாதம் ரூ.2,500 வருவாய் ஈட்டிய நபர் தற்போது ரூ.87,000 கோடி வணிக நிறுவனங்களின் உரிமையாளர்.
மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்
இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் கோலோச்சும் பல கோடீஸ்வரர்களில் விவேக் சாந்த் சேகல் என்பவரும் ஒருவர். அவுஸ்திரேலியாவில் வாழும் மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்.
Motherson குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். Motherson குழுமத்தின் மொத்த வருவாய் என்பது ரூ.87,404 கோடி என்றே கூறப்படுகிறது. தமது தாயாரின் நினைவாக தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு Motherson என்றே பெயர் சூட்டியுள்ளார்.
தொடக்கத்தில் வெள்ளி வணிகத்தில் ஈடுபட்டு வந்த Motherson குழுமம் தற்போது ஒரு கூட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மட்டுமின்றி வாகனத் தொழிலிலும் முன்னிலையில் உள்ளது.
விவேக் சேகலில் தாத்தா வெற்றிகரமான நகைக்கடைக்காரர். விவேக் சேகல் தனது 18 வயதில் ஒரு கிலோ வெள்ளியை 1 ரூபாய்க்கு விற்றுள்ளார். 1970களின் தொடக்கத்தில் மாதம் ரூ.2,500 வரை வருவாய் ஈட்டியுள்ளார்.
சந்தை மதிப்பு 87,000 கோடி
வெள்ளி வணிகத்தில் எதிர்காலம் இருப்பதை புரிந்து கொண்ட சேகல், தனியாக தொழில் தொடங்க முடிவு செய்துள்ளார். 1975ல் Motherson என்ற பெயரில் தமது தாயாருடன் இணைந்து வெள்ளி வியாபார நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
ஆனால் மிக விரைவிலேயே கடனாளி ஆனார். இதனையடுத்தே, வாகனத் தொழிலில் ஈடுபட Motherson குழுமம் முடிவு செய்தது. அத்துடன் கடனில் இருந்து மீளும் அளவுக்கு வருவாய் ஈட்டினர்.
தற்போது Motherson குழுமத்தின் சந்தை மதிப்பு 87,000 கோடி என்றே கூறப்படுகிறது. அத்துடன் விவேக் சேகலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.33,287 கோடி என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |