ரூ.2 லட்சம் கோடி நிறுவனம்.,“கனடாவின் வாரன் பஃபெட்” என அழைக்கப்படும் இந்தியர் யார்? சொத்து மதிப்பு
பிரேம் வாட்சா “கனடாவின் வாரன் பஃபெட்” என்று அழைக்கப்படுவதுடன் இந்தியாவின் உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஶ்ரீ விருதை பெற்றுள்ளார்.
பிரேம் வாட்சா (Prem Watsa)
இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்த பிரேம் வாட்சா, சென்னை IITயில் இரசாயன பொறியியல் பட்டம் பெற்றார்.
இதையடுத்து கனடாவின் ஒன்டாரியோ-வுக்கு(Ontario) இடமாறிய பிரேம் வாட்சா, மேற்கு ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் உள்ள ரிச்சர்ட் ஐவி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பிரிவில் MBA பட்டம் பெற்றார்.
பல்லாயிரம் கோடி நிறுவனம்
1984ம் ஆண்டு டோனி ஹாம்ப்ளின் என்பவரும் இணைந்து பிரேம் வாட்சா “ஹேம்ப்ளின் வாட்சா முதலீட்டு ஆலோசகர்” என்ற முதலீட்டு நிறுவனத்தை தொடங்கினார்.
இதற்கு அடுத்த வருடமே சிறிய கனேடிய காப்பீடு நிறுவனமான Markel Financial என்ற நிறுவனத்தை வாட்சா கையெடுத்தார்.
திவாலாகும் நிலையில் இருந்த Markel Financial நிறுவனம் Fairfax Financial நிறுவனம் என பிரேம் வாட்சா பெயர் மாற்றம் செய்தார்.
இந்நிறுவனம் தற்போது ரூ.2,34,931 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.
சொத்து மதிப்பு
பிரேம் வாட்சாவின் தொடர் வெற்றிகளை தொடர்ந்து அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.11,622 கோடியாகும்.
அத்துடன் பிரேம் வாட்சா “கனடாவின் வாரன் பஃபெட்”(Canadian Warren Buffet) என்று அழைக்கப்படுகிறார். 2020ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஶ்ரீ(Padma Shri) விருதை பிரேம் வாட்சா பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |