ஆரக்கிள் நிறுவன வேலையை விட்டுவிட்டு... துணிச்சலாக எடுத்த முடிவால் இன்று சொத்து மதிப்பு ரு 13,380 கோடி
இந்தியாவின் புனே நகரத்தில் பிறந்த Neha Narkhede என்பவரே, ஆண்கள் கோலோச்சும் வணிக உலகில் தனக்காக இடத்தை உருவாக்கியவர்.
பட்டியலில் 8வது இடம்
அமெரிக்காவில் பட்டம் பெற்ற நேஹா தமக்கான நிறுவனம் ஒன்றை தொடங்கும் முன்னர் ஆரக்கிள் மற்றும் LinkedIn போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
இதன் பின்னர் Confluent என்ற நிறுவனத்தை உருவாக்கியவர், 2021ல் அதை பொதுத்துறை நிறுவனமாக மாற்றினார். அதே ஆண்டு இந்தியாவிலேயே பெரும் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 8வது இடம் பிடித்தார்.
மட்டுமின்றி, அமெரிக்காவின் மிகவும் வெற்றிகரமான பெண் தொழிலதிபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தாம் இதுவரை குவித்துள்ள வெற்றிகள் அனைத்திற்கும் காரணம் தமது தந்தை என குறிப்பிட்டுள்ள நேஹா,
சொத்து மதிப்பு
சிறுவயதில் இருந்தே இந்திரா காந்தி, கிரண் பேடி, இந்திரா நூயி போன்ற பிரபலங்களின் புத்தகங்களைப் படிக்கத் தூண்டினார் என்றார்.
Confluent நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 75,000 கோடி என்றே கூறப்படுகிறது. 2021ல் Confluent நிறுவனம் பொதுத்துறையில் நுழைந்த போது அவரது சொத்து மதிப்பு ரூ 13,380 என அதிகரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |