முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளில் யார் பெரும் கோடீஸ்வரர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் மிகப்பெரிய பங்குதாரரான முகேஷ் அம்பானி, ஆசியா மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
10 பேர்களில் ஒருவராக
அவரது சொத்து மதிப்பானது பங்குச்சந்தையின் செயல்பாட்டை பொறுத்து 90 பில்லியன் அமெரிக்க டொலர் என்பதில் இருந்து அடிக்கடி மாறுபடும். இருப்பினும் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் 10 பேர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
முகேஷ் அம்பானியின் வருவாய் என்பது பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகத்தின் ஊடாக வருகிறது. அவரது மனைவி நிதா அம்பானியும் அதே அளவுக்கு சக்தி வாய்ந்தவர்.
ரிலையன்ஸின் அறக்கட்டளை மற்றும் கல்வி முயற்சிகளுக்கு மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் கலாச்சார முயற்சிகளுக்கும் அவர் பங்களிக்கிறார். நீதா அம்பானி தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் கலை, ஆடம்பரம் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது தலைமுறையின் பணக்கார இளம் தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவரது சொத்துக்களில் பெரும்பகுதி முகேஷ் அம்பானி உருவாக்கியவையே.
ஜியோ நிறுவனத்தின்
தமது சகோதரர்கள் இஷா மற்றும் ஆகாஷ் போன்று ஆனந்தும் அமெரிக்காவில் கல்வி பயின்றவர். 2020 முதல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் பசுமை முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2023-24 நிதியாண்டில் சுமார் 7.5 பில்லியன் பவுண்டுகள் வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது. 107 பில்லியன் டொலர் சந்தை மதிப்பு கொண்ட ஜியோ நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆனந்த் பொறுப்பில் உள்ளார்.
மட்டுமின்றி, மும்பை இந்தியன் அணியில் ஆனந்த் அம்பானிக்கும் பங்கிருப்பதால், அவரது மொத்த சொத்தில் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |