9,000 கோடி தொண்டு நிறுவனங்களுக்காக... தொலைத்தொடர்பு நிறுவன உரிமையாளர்: அவரின் சொத்து மதிப்பு
உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லின் நிறுவனரான சுனில் பார்தி மிட்டல் தான் தமது சொத்தில் சுமார் 9,000 கோடியை தொண்டு நிறுவனங்களுக்காக ஒதுக்கியவர்.
மொத்த சொத்து மதிப்பு ரூ.120,000 கோடி
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் சுனில் பார்தி மிட்டல். இவர் மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ.120,000 கோடி என்றே கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் போட்டி போட்டு வருகிறது. பஞ்சாப் மாகாணத்தின் லுதியானாவில் 1957ல் பிறந்தவர் சுனில் மிட்டல். இவரது தந்தை பஞ்சாப் மாகாணத்தில் அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர்.
முசோரியின் உண்டு உறைவிடப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார் சுனில் பார்தி மிட்டல். தமது தந்தை போன்று அரசியலில் களம் காணாமல், தொழில் துறையில் கவனத்தை செலுத்தினார்.
9139 கோடி தொண்டு நிறுவனங்களுக்காக
தந்தையிடம் இருந்தே ரூ.20,000 கடனாக பெற்று சைக்கிள் வியாபாரம் தொடங்கினார். 1992ல் இந்திய அரசாங்கம் மொபைல் நெட்வொர்க் உரிமங்களை ஏலத்தில் வைத்தது. சுனில் மிட்டலின் நிறுவனமும் அதில் பங்கேற்று உரிமம் பெற, அதுவே ஏர்டெல் என உருவானது.
1995 முதல் ஏர்டெல் தமது சேவையை துவங்கியது. 2022 ஜனவரியில் கூகிள் நிறுவனம் 1 பில்லியன் டொலர் தொகையை பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்தது. பார்தி குளோபல் என்ற தொலைத்தொடர்பு சேவையை இவரது மகன் ஷ்ரவின் கவனித்துக் கொள்கிறார்.
அத்துடன் மிட்டல் சகோதரர்கள் இணைந்து தங்கள் சொத்தில் சுமார் 9139 கோடி ரூபாயை தொண்டு நிறுவனங்களுக்காக செலவிட உறுதி ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |