கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்தவர்... இன்று முகேஷ் அம்பானிக்கு நிகரான கோடீஸ்வரர்: யாரிவர்
பொதுவாக சமகால கோடீஸ்வரர்கள் பெரும்பாலானோர், ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து கடுமையான உழைப்பாலும், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தியதாலும் உச்சம் தொட்டுள்ளார்கள்.
பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்
அப்படியான ஒருவர் தான் சீனாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான Zhong Shanshan. சீனாவில் பரவலாக பயன்படுத்தப்படும் போத்தல் குடிநீர் வரிசையில் Nongfu Spring என்ற நிறுவனத்தின் தலைவர் தான் Zhong Shanshan.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 69 வயதான Zhong Shanshan என்பவரின் சொத்து மதிப்பு சுமார் 6,080 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 501522 கோடி.
சீனாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான Zhong Shanshan சொத்து மதிப்பில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அதானிக்கு மிக அருகாமையில் உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 911080 எனவும் அதானியின் சொத்து மதிப்பு ரூ 654680 என்று கூறப்படுகிறது.
கட்டுமானத் தொழிலாளி
Zhong Shanshan தமது தொடக்க நாட்களில் கட்டுமானத் தொழிலாளியாகவும் பணியாற்றியுள்ளார். மட்டுமின்றி, பத்திரிகையில் செய்தி சேகரிப்பவராகவும், மதுபான விற்பனை முகவராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் தான் 1988ல் சொந்தமாக தொழில் தொடங்கியுள்ளார். 2020ல் Nongfu Spring நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. போத்தல் குடிநீர் நிறுவனம் மட்டுமின்றி, Wantai உயிரியல் ஆய்வகமும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றாலும், மிக சாதாரண வாழ்க்கை வாழ்பவர் Zhong Shanshan. பெரும்பாலும் சீன மதுபான நிறுவனங்களில் இருந்தும் மருந்து நிறுவனங்களில் இருந்தும் தான் Zhong Shanshan வருவாய் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |