பல்லாயிரம் கோடி வர்த்தகம்... ஐக்கிய அமீரகத்தில் பணக்கார இந்தியர்களில் ஒருவர்: யார் இந்த ரேணுகா
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Landmark குழுமத்தின் தலைவர் தான் ரேணுகா ஜக்தியானிஹா.
பணக்கார இந்தியர்கள் பட்டியல்
கடந்த 1973ல் ரேணுகாவின் கணவர் மிக்கி ஜக்தியானி என்பவரால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் ஒரே ஒரு கடையாக துவங்கப்பட்டது. தற்போது Landmark குழுமத்திற்கு என 24 நாடுகளில் 2,200 கடைகள் செயல்பட்டு வருகிறது.
69 வயதான ரேணுகா ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 100 முதல் முறை பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இணைந்தார். ரேணுகாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது அவரது கணவர் மிக்கி ஜக்தியானி மறைவுக்கு பிறகு ரூ.40,040 கோடி என்றே கூறப்படுகிறது.
1993ல் Landmark குழுமத்தில் ரேணுகா இணைந்துள்ளார். 2017ல் தலைமை நிர்வாக அதிகாரியானார். 2022ல் அந்த பொறுப்பில் இருந்து விலகி தமது மக்களுக்கு வாய்ப்பளித்தார்.
இந்திய உள்ளிட்ட 24 நாடுகளில்
ரூ.73,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட Landmark குழுமத்தின் நிர்வாக இயக்குனர்களாக ரேணுகாவின் பிள்ளைகள் ஆர்த்தி, நிஷா மற்றும் ராகுல் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய உள்ளிட்ட 24 நாடுகளில் மொத்தம் 2,200 கடைகளை Landmark குழுமம் நடத்தி வருகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக Landmark குழுமத்தினை முன்னெடுத்து நடத்தி வந்துள்ளார் ரேணுகா. தற்போது Landmark குழுமத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக ரேணுகா செயல்படவில்லை என்றாலும், தலைவராக எதிர்கால திட்டங்களை தமது குழுவினருடன் வகுத்து வருகிறார் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |