மூன்றே நாட்களில் ரூ 31,000 கோடியை இழந்த பெரும் கோடீஸ்வர பெண்மணி... அவரது சொத்து மதிப்பு
உலகில் பல கோடீஸ்வரர்கள் பல காரணங்களால் தங்கள் தொழில்களில் கடும் பின்னடைவுகளை அடிக்கடி சந்திக்கின்றனர். கடுமையான இழப்பைச் சந்திப்பதால் அவர்களின் சொத்து மதிப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது.
நாளுக்கு 350 மில்லியன் டொலர்
சமீபத்தில் அவ்வாறு இந்தோனேசியாவின் பெரும் கோடீஸ்வர பெண் என்ற பட்டத்தை இழந்தவர் மெரினா புடிமான். DCI இந்தோனேசியா என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான 63 வயது புடிமான் வெறும் மூன்றே நாட்களில் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது இந்திய மதிப்பில் ரூ 31,070 கோடி தொகையை இழந்துள்ளார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நாளுக்கு 350 மில்லியன் டொலர் தொகையை அவர் சம்பாதித்து வந்துள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.
இருப்பினும், அவரது நிறுவனத்தின் பங்குகள் திடீரென்று சரிவை எதிர்கொண்ட நிலையில், அவர் தனது நிகர சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட பாதியை இழந்துவிட்டார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் 20 ஆம் திகதி நிலவரப்படி, புடிமனின் நிகர சொத்து மதிப்பு 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 44905 கோடி) என்றே தெரிய வந்துள்ளது.
முதல் இணைய சேவை நிறுவனம்
புடிமானின் சக தொழிலதிபர்களான Otto Toto Sugiri மற்றும் Han Arming Hanafia ஆகிய இருவரின் மொத்த நிகர சொத்து மதிப்பும் கடும் சரிவுக்கு முன்னர் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது.
கடந்த 2011ல் Otto Toto Sugiri மற்றும் Han Arming Hanafia ஆகிய இருவருடன் இணைந்து DCI இந்தோனேசியா என்ற நிறுவனத்தை புடிமான் நிறுவியுள்ளார். ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள புடிமான், 1985ல் ஓட்டோ டோட்டோ சுகிரி என்பவருடன் பாலி வங்கியில் பணியாற்றியுள்ளார்.
1989ல் மென்பொருள் நிறுவனமான Sigma Cipta Caraka-ல் இணைந்துள்ளார். மட்டுமின்றி, இந்தோனேசியாவின் முதல் இணைய சேவை நிறுவனமான Indonet-ஐ 1994 ஆம் ஆண்டு இணைந்து நிறுவினார். 2023ல் புடிமானும் பிற இணை நிறுவனர்களும் தங்கள் பங்குகளை மொத்தமாக விற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |