லண்டனை சேர்ந்த 16 வயதான பெண் குறித்து அவசர தகவலை வெளியிட்டுள்ள பொலிசார்! வெளியான புகைப்படம்
லண்டனை சேர்ந்த 16 வயது இளம்பெண் காணாமல் போனது தொடர்பில் பொலிசார் அவசர தகவலை வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் ரிச்மோண்டை சேர்ந்தவர் Harmony Murray (16). இவர் கடந்த 11ஆம் ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக காணப்பட்டார். இதன்பின்னர் அவர் காணாமல் போயிருக்கிறார். காணாமல் போன போது Harmony Murray கருப்பு நிறத்திலான மேல் உடையும், அதே உடையிலான பேண்டும் அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் Harmony நலம் குறித்து கவலைப்படுவதாகவும், அவர் பத்திரமாக நலமுடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பொலிசார் Harmony ஐ அவசரமாக தேடி வருகின்றனர். இந்த விடயத்தில் பொதுமக்கள் உதவியை எதிர்பார்க்கும் பொலிசார் Harmony-ஐ யாராவது பார்த்தாலோ அல்லது அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
