பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு
UK’s Happiest Places List: Richmond upon Thames claims top spot: பிரித்தானியாவின் மகிழ்ச்சியான பகுதியாக ரிச்மண்ட் அபான் தேம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்கள்
Rightmove என்ற நிறுவனம் வெளியிட்ட 15-வது ஆண்டறிக்கையில் ஹேப்பி அட் ஹோம் இன்டெக்ஸ்(Happy at Home Index) என்ற கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானியாவின் மிகவும் மகிழ்ச்சியான நகரமாக ரிச்மண்ட் அபான் தேம்ஸ்(Richmond upon Thames) தேர்வாகியுள்ளது.

இங்குள்ள அழகிய காட்சிகள், துடிப்பான கேஃபே கலாச்சாரம், அழகான ஆற்றுப் பாதைகள், லண்டன் நகரின் மையப்பகுதிக்கு செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள் ஆகியவை ரிச்மண்ட் அபான் தேம்ஸ் நகரை மகிழ்ச்சியான நகராக மாற்றியுள்ளது.
தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் நார்த் யார்ழக்ஷயரில் உள்ள ஹாரோகேட்(Harrogate), மூன்றாவது இடத்தில் குளோஸ்டர்ஷயரில் உள்ள சைரன்செஸ்டர்(Cirencester) ஆகியவை உள்ளன.
பிராந்திய அளவில் வேல்ஸில் முதலிடத்தில் மான்மவுத்(Monmouth), ஸ்காட்லாந்தில் முதலிடத்தில் கிர்கால்டி(Kirkcaldy) நகரும் உள்ளன.

வீடுகளின் விலை ஏற்பட்டுள்ள உயர்வு
மகிழ்ச்சியான நகரமாக ரிச்மண்ட் அபான் தேம்ஸ் தேர்வாகியுள்ள நிலையில், இங்கு வீடு வாங்க விரும்புபவர்கள் மிகப்பெரிய தொகை செலவிட தயாராக இருக்க வேண்டும்.
சராசரியாக இப்பகுதியில் உள்ள வீடுகளின் விலை சுமார் 10 லட்சம் பவுண்டுகளாக உள்ளது.
அமைதியான சூழ்நிலையும், அன்றாட தேவைகளுக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையே வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதால் இந்த மகிழ்ச்சியான நகரங்களில் உள்ள வீடுகளின் விலையில் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதிக வசதிகள் இத்தகைய மகிழ்ச்சியான நகரங்களின் கணக்கெடுப்பு அடிக்கடி முதலிடம் பிடித்தாலும், சொத்துக்களின் விலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மகிழ்ச்சிக்கான ஆதாரம் இல்லை என்று ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.