ரிக்கெல்டன், ரோஹித் ஷர்மா ருத்ர தாண்டவம்: மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
ரஹானே 67, ரகுவன்ஷி 51 ஓட்டங்கள்
மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் 2026 போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் அஜிங்க்யா ரஹானே 40 பந்துகளில் 67 ஓட்டங்களும், அன்கிரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ஓட்டங்களும் விளாசினர்.
ஃபின் ஆலன் 37 (17) ஓட்டங்களும், ரிங்கு சிங் 33 (21) ஓட்டங்களும் எடுத்தனர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கெல்டன் சரவெடி ஆட்டம் ஆடினர்.
ரோஹித், ரிக்கெல்டன் சரவெடி
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 38 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) 43 பந்துகளில் 81 ஓட்டங்கள் (8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாச, திலக் வர்மா 20 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
எனினும் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்கள் விளாச, மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |