சரியான உணவு இல்லாததால் பிரித்தானியாவில் தெருக்களில் வாழும் மக்களிடையே பரவும் நோய்
பிரித்தானியாவில், வீடற்றவர்கள் பலர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு சரிவிகித உணவு கிடைக்காததால், அவர்களில் பலர் பழங்கால நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தெருக்களில் வாழும் மக்களிடையே பரவும் நோய்
பிரித்தானியாவில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் பலர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், அவர்களுக்கு, குறிப்பாக சரிவிகித உணவு கிடைப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல்களில், சமைத்து சாப்பிடும் வசதி இல்லை.
அத்துடன், உணவுப்பொருட்களை சேமித்து வைக்கவோ, நீரிழிவு பாதிப்புள்ள குழந்தைகளுக்கான இன்சுலினை வைக்கவோ ஃப்ரிட்ஜ் வசதியும் இல்லை.
ஆகவே, கடைகளில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் வகை உணவுகள், கப் நூடுல்ஸ் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறார்கள் பலர்.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் அரியவகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டான் ஒரு சிறுவன். அது என்ன நோய் என கண்டுபிடிக்க மருத்துவர்கள் பாடாய் பட்டிருக்கிறார்கள்.
பின்னர், அந்தப் பையன் காய்கறிகளோ, பழங்களோ சாப்பிடுவதே இல்லை என்பது தெரியவர, அப்போதுதான் அவனுக்கு ரிக்கெட்ஸ் என்னும் நோய் தாக்கியுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
இந்த ரிக்கெட்ஸ் நோய், விக்டோரியா யுக நோய் என அழைக்கப்படுகிறது. 1800களில் வசதியற்றவர்களிடையே இந்த நோய் பரவலாக காணப்பட்டுள்ளது.
தற்போது, சரியான அல்லது, சரிவிகித உணவு கிடைக்காமல் நூடுல்ஸ், சாண்ட்விச் மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவற்றை மட்டும் சாப்பிடுவதால், ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர்களிடையே இந்த ரிக்கெட்ஸ் நோய் அதிகரித்துவருவதாக தொண்டு நிறுவனங்களும் கவலை தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |