நான் சொல்றேன்... ஐபிஎல் தொடரை இந்த அணி தான் வெல்லும் - ரிக்கி பாண்டிங் கணிப்பு!
இன்று தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் வெல்லும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் இன்று முதல் மே 28-ம் திகதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரிக்கி பாண்டிங் கணிப்பு
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடர் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
இன்று தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணி வலுவான அணி தான் இருக்கிறது. கடந்த தொடரில் குஜராத் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் கடந்த தொடரில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக இருக்கிறது. ஆதலால், இந்த தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசுரபலத்துடன் இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.