இப்படி விளையாடினா அவுட் ஆகிடுவார்! சரியாக கணித்த ரிக்கி பாண்டிங்: அசந்து போன அஸ்வின்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்கைப் போன்று யாராலும் புரிந்து வைத்திருக்க முடியாது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே கடந்த 8-ஆம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, கடந்த 16-ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்த அவுஸ்திரேலியா அணி 479 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, 243 ஓட்டங்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய(19.12.2021) நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Unparalleled understanding of technique - Sheer mastery from @RickyPonting pic.twitter.com/tMAKDg7qmm
— Srinath (@srinathb) December 18, 2021
இந்நிலையில், இப்போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியின் ஆல்ரவுண்டர் க்ரீன் தனது காலை இடது புறமாக நகர்த்தி வைத்து விளையாடி வந்தார்.
அப்போது பென் ஸ்டோக்ஸ் பந்து வீசி கொண்டிருக்கையில் வர்ணனையாளராக இருந்த பாண்டிங் க்ரீனின் கால் நகர்வு சரி இல்லை என்றும் பவுலர் நேராக ஸ்டம்பை நோக்கி பந்து வீசினால் நிச்சயம் அவர் போல்ட் ஆவார் என்று கூற, அதே போன்று பென் ஸ்டோக்ஸ் பந்து வீசியதால், கிரீன் க்ளின் போல்ட் ஆகி வெளியேறினார்.
ரிக்கி பாண்டிங்கி கணிப்பை பார்த்து வியந்து போன, அஸ்வின், கிரிக்கெட்டை இவரை விட யாராலும், புரிந்து வைத்திருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Cricket literacy rate ✈️✈️ https://t.co/YiaiQa9hvE
— Ashwin ?? (@ashwinravi99) December 18, 2021