திடீரென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கு இதயம் சம்மந்தமான பிரச்சனை இருக்கலாம் என்ற காரணத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ரிக்கி பாண்டிங்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அந்நாட்டு ரசிகர்களால் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் வீரராக உள்ளார்.
இந்த நிலையில் பெர்த்தில் அவுஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்து வந்தது. அப்போது பாண்டிங் சேனல் 7 இன் நட்சத்திர வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.
William WEST / AFP
உடல்நலக்குறைவு
ஆனால் மதிய உணவு நேரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறிய பாண்டிங் மீண்டும் வர்ணனையாளர் பணியை செய்ய வரவில்லை. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், இதயம் சம்ம்மந்தமான பிரச்சனை இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் மருத்துவமனையை நாடியுள்ளார்.
பாண்டிங் தனது சகாக்களிடம் தான் நலமாக இருப்பதாகவும் ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிறகு சாத்தியமான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது.