இளவரசிகள் பீட்ரைஸ், யூஜீனி இடையில் பிளவு? பரபரப்பு தகவல்
Historic rift between Andrew's daughters, Princess Beatrice and Princess Eugenie: இளவரசர் ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணைபிரியாத சகோதரிகள் போல எங்கும் நடமாடும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசிகள் பீட்ரைஸ், யூஜீனி இடையில் பிளவு?
இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த விடயம் அவரது குடும்பத்துக்குள்ளேயே பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், பிரச்சினைகளுக்கிடையேயும் பெற்றோரையும் விட்டுக்கொடுக்காமல், தாங்களும் இணைபிரியாமல் வாழ்ந்துவந்த இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், இப்போது தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படத் துவங்கியுள்ளார்கள்.

ஏற்கனவே, இளவரசர் வில்லியம் மன்னராகும்போது தங்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என பீட்ரைஸும் யூஜீனியும் பயந்துகொண்டிருக்கும் நிலையில், பெற்றோருடன் தொடர்பிலிருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை புரிந்துகொண்ட இருவரும், பெற்றோருடன் தொடர்பிலிருப்பதை தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைவிட ஒரு படிமேலே போய், நாம் நம் வாழ்க்கையைப் பார்ப்போம் என பீட்ரைஸும் யூஜீனியும் தனித்தனி வழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரபரப்பை உருவாக்கும் செய்திகள் வெளியாகிவருகின்றன.