“சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை” அவுஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி!
அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு “சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை“ வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை
அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்தோ, அல்லது பணியமர்த்தியவரிடம் இருந்தோ வரும் அழைப்புகளை சட்டப்பூர்வமாக துண்டிக்கும் உரிமை திங்கட்கிழமை(ஆகஸ்ட் 26) முதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பணி நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள், இமெயில்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை கவனிக்கவோ அல்லது பதிலளிக்கவோ வேண்டும் என்ற கட்டாயம் சட்டப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.(இது நியாயமற்ற முறை என்று கருதப்படாத வரை).
இதனை தொழிற்சங்கள் வரவேற்று இருப்பதுடன், தொழிலாளர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பாதுகாக்க உதவும் என தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலிய தொழிற்சங்க கவுன்சில் தலைவர் Michele O'Neil, இன்று உழைக்கும் மக்களுக்கு ஒரு வரலாற்று தினம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமானது சில ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள சட்டத்துடன் ஒத்து இருப்பது கவனிக்கத்தக்கது.
ஆழமான குழப்பத்தை தரும்
இந்த சட்டத்திற்கு அவுஸ்திரேலிய தொழில் நிறுவன தலைவர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
ஆனால், “சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை சட்டமானது“ வேகமாக நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும், மோசமான சிந்தனை மற்றும் ஆழமான குழப்பதை கொண்டு இருப்பதாகவும் அவுஸ்திரேலிய தொழில் நிறுவன குழுமம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |