பிரான்சில் வலதுசாரிக் கட்சி தோற்றாலும் அபாயம் நீங்கவில்லை: ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்
பிரான்சின் நெருங்கிய நட்பு நாடு ஜேர்மனி. பிரான்சில் நடைபெற்ற தேர்தலை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறது ஜேர்மனி.
பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்பில் வலதுசாரிக் கட்சி முன்னிலை வகிக்கிறது என்றதுமே, ஜேர்மன் சேன்ஸலரே, பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சியமைத்தால் இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படுமே என கவலை தெரிவித்திருந்தார்.
வலதுசாரிக் கட்சி தோற்றாலும் அபாயம் நீங்கவில்லை
இந்நிலையில், இரண்டாவது சுற்று தேர்தலில் வலதுசாரிக்கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இப்போது ஜேர்மன் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் அது குறித்து என்ன நினைக்கிறார்கள் என கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரான தொபியாஸிடம் (Tobias Bacherle) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த தொபியாஸ், பிரான்சில் வலதுசாரிக் கட்சியால் ஆட்சியமைக்க இயலவில்லை என்றாலும், அபாயம் முற்றிலும் நீங்கிவிடவில்லை என்கிறார்.
ஏனென்றால், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சிக்கு இப்போதும் 143 இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. அதாவது, இப்போதும் அக்கட்சிக்கு ஆதரவு உள்ளது. அது, இத்தனை ஆண்டுகள் ஆண்ட Renaissance கட்சியின் மீதான வெறுப்பு அல்லது விருப்பமின்மையால் மக்கள் அளித்த தீர்ப்பு.
எப்படியும், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளது என்பதால் அபாயம் இன்னமும் நீங்கிவிடவில்லை என்கிறார் தொபியாஸ்.
ஆக, Renaissance கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு நீங்கும் வகையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு மக்கள் மனதைக் கவரவேண்டியது மேக்ரானின் கடமை என்கிறார் தொபியாஸ்.
இதற்கிடையில், மேக்ரான் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க பிரான்ஸ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அதனால் இடதுசாரிக் கட்சி கோபத்தில் உள்ளது. எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அமைக்க கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |